நீலகிரி எல்லநல்லி உள் வட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கேத்தி காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதம் அடைந்தது
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது
கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் காவல் நிலையத்தின் மீது இராட்சத கற்பூர மரம் விழுந்தது இதனால் காவல்நிலைய கட்டிடம் மற்றும் மின்சார கம்பங்கள் சேதமடைந்தது
உடனடியாக மின்வாரியத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது
சேதம் அடைந்த பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காவல் நிலையத்தின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
நிருபர் . சாமுவேல்
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









