உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஸ்கேன் செண்டரில் மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

Oplus_0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினசரி உள்நோயாளியாக 500க்கும் மேற்பட்டோரும், புறநோயாளியாக 1000க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.,இந்த மருத்துவமனையில் இயங்கி வரும் ஸ்கேன் செண்டர் மூலம் எலும்பு முறிவு, தசை மற்றும் வயிறு, தலை உள்ளிட்ட ஸ்கேன்கள் ஒரு நாளைக்கு 50 முதல் 100 ஸ்கேன்கள் எடுக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மாதமும் வயிறு, தலைக்கு மட்டும் 500க்கும் மேற்பட்ட ஸ்கேன்கள் எடுக்கப்படுவதாக கூறப் படுகிறது.,இந்நிலையில் தற்போது மருத்துவர் பற்றாக்குறையால் ஸ்கேன் எடுக்கப்பட்டாலும் அதற்கான அறிக்கையை வழங்க ரேடியோலஞி மருத்துவர் இல்லாத நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.,கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக விபத்து உள்ளிட்ட ஸ்கேன் அறிக்கையை பெற மதுரைக்கு சென்று வாங்கி வந்து மீண்டும் சிகிச்சை பெறும் சூழல் நீடிப்பதால் நோயாளிகள் பெரும் அவதியை சந்திக்கின்றனர்.,மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுத்து மாவட்ட தலைமை மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் இயங்கும் ஸ்கேன் செண்டருக்கு மருத்துவர்களை நியமித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.,

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!