ரயில்வே கேட்டில் பணியிலிருக்கும் கேட்கீப்பர்கள் சமீபகாலமாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். ரயில் வரும் நேரங்களில் கேட்கீப்பருக்கும் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இது பல இடங்களில் மோதலாக வெடித்து வருகிறது.
எனவே ரயில்வே கேட்டில் பணியிலிருக்கும் கேட் கீப்பர்களிடம் தகராறு செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை ரயில்வே போலீஸ் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு சுகுமாரன் மற்றும் தலைமை காவலர்கள் மாரியப்பன், செல்லபாண்டியன், ரவிச்சந்திரன், முதல் நிலை காவலர் செல்வகணேஷ் மற்றும் தனிப்பிரிவு காவலர் பிரதீஷ் மற்றும் போலீசார் மதுரை அழகப்பன் நகர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அவர்கள் ரயில் வரும் நேரங்களில் கேட் அடைக்கப்படும். அதை மீறி சென்றால் விபத்துகள் நடக்க நேரிடும். அவ்வாறு செல்பவர்களை தடுக்கும் பட்சத்தில் கேட் கீப்பர்களிடம் தகராறில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு செயல்படுவது தவறு ஆகையால் கேட்டில் பணியிலிருக்கும் ஊழியர்களிடம் பிரச்சனைகளில் ஈடுபட வேண்டாம், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.