பழனி பகுதியில் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக வணிக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்த 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு..
திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் அரசு உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக வணிக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஆயக்குடி பகுதியில் அரசு உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக வணிக கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்த புது ஆயக்குடியை சேர்ந்த காஜாமைதீன்(40), நெய்க்காரப்பட்டி சேர்ந்த குமரேசன்(32) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து HP, Indane, Bharat உள்ளிட்ட 73 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கரூரை சேர்ந்த மூர்த்தி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.