மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை என்ற தலைப்பில் மகாத்மா காந்தி தபால் தலை கண்காட்சி, மாணவர்கள் அனைவரும் மகாத்மா காந்தி வரலாற்றினை, சிந்தனைகளை, அறத்தினை, அகிம்சா வழியினை அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.
கல்லூரி இயக்குனர் முனைவர் ராமானுஜம் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி, கல்விப் புல முதன்மையர் மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், கியூபா, நேவிஸ், காம்பியா, கிரநாடா, சார்ஜா, மாசிடோனியா , பலாவு, ருமேனியா, தென் ஆப்ரிக்கா, சுரிநாம், வெனிசுலா, மாசிடோனியா , காங்கோ, கானா, கினியா- பிஸ்சாசு, மடகஸ்கர், அயர்லாந்து, ஈரான், யுனைடட் ஸ்டேட்ஸ் அமெரிக்கா, ஜாம்பியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தபால் தலைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாராம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. கண்காட்சியில் சுதந்திர இந்தியா அஞ்சல் தலைகளில் 1948 ஆம் ஆண்டு வெளியிட்ட காந்தி தபால் தலைகள், (1869 – 1969) காந்தி நூற்றாண்டு தபால் தலைகள், காந்தி, நேரு, தண்டி யாத்திரை, 125 வருட காந்தி தபால் தலை, 50வது ஆண்டு நினைவார்த்த தபால் தலை, உப்பு சத்தியாகிரகம், 25, 30, 35, 50, 60 காசுகள் 1ரூபாய் பொது பயன்பாடு தபால் தலைகள், காட்சி படுத்தப்பட்டது.
காந்தி நூற்றாண்டிற்காக வெளியிட்ட புகைப்பட அஞ்சல் அட்டைகள், இன்லென்ட் கடிதம், விமான அஞ்சல் கடிதம் காட்சிப்படுத்தப் படுகிறது. மேலும் கரம்சந்த் காந்தி புத்திலி பாய் அம்மையாருக்கும் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை போர்பந்தரில் பயின்று ராஜ்காட் கத்தியவார் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் அப்பள்ளி ஆல்பர்ட் உயர்நிலைப் பள்ளி என பெயர் மாற்றம் பெற்றது. பதிமூன்றாம் வயதில் கஸ்தூரிபாயைத் திருமணம் செய்தார். 1889 முதல் 1893 ஆம் ஆண்டு காலங்களில் லண்டனில் சட்டம் பயின்றார். 1893 – 1904 காலங்களில் தென் ஆப்ரிக்கா செல்லும் போது அங்கு இருந்த நிறவெறி, அதிர்ச்சியை தந்தது. பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறவேற்றுமையால் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. அற வழியில்,அகிம்சை வழியில் சத்தியாகிரகப் போராட்டம் தென்னாப்பிரிக்காவில் 1904-1914 காலங்களில் நடைபெற்றது. 1915 காந்தி இந்தியா வந்தடைந்தார். இரவீந்திர நாத் தாகூர் அவரை மகாத்மா என்று அழைத்தார். 1922ல் காந்திக்கு ஆறாண்டு சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டு 1924 ஆண்டு விடுதலை அடைந்தார். டிசம்பரில் பெல்காமில் தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930 – 1942 காலங்களில் உப்பு வரிக்கு எதிராக சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். 1930 மார்ச் மாதம் காந்தி 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து அரபிக் கடலின் கரையோரத்தில் இருந்த தண்டிக்கு 241 மைல் தூர பாதயாத்திரையை மேற்கொண்டார். 25 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5ஆம் நாள் தண்டியை அடைந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஒரு கையளவு உப்பை உலர்ந்த உப்பங்கழியிலிருந்து எடுத்து உப்புச் சட்டத்தை மீறினார். 1939ல் இரண்டாவது உலக யுத்தம் மூண்டது. 1947 மார்ச் பிரிட்டிஷ் அரசு பிரபு மவுண்ட்பேட்டனை வைஸ்ராயராக இந்தியாவிற்கு அனுப்பி ஆகஸ்ட் 15 விடுதலை அளிப்பதாக முடிவெடுத்தது. 1948 ஜனவரி 30 தேதி அன்று பிர்லா மாளிகைக்கு மனு, அபா இரண்டு பேத்திகளின் தோள்கள் மீது கரங்களை வைத்து மாலை 5.13 மணிக்கு பிரார்த்தனை இடத்திற்கு வந்தார். கூட்டத்தில் நாது ராம் விநாயக கோட்சே காந்தி மார்பில் மூன்று முறை சுட்ட போது ஹேராம் எனக் கூறி கீழே விழுந்தார். உடல் தகனம் செய்யப்பட்ட ராஜ்காட்டில் காந்தியின் சமாதியில் கடைசி வார்த்தையான ஹேராம் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது என 1869 – 1948 மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் உலக நாடுகளில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், செட் அ நெட், புகைப்பட அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள் காட்சிப்படுத்தப் பட்டு மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறும், சிந்தனை கருத்துகளும் மகாத்மா காந்தி 150 ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 150 நாட்களில் 150 இடங்களில் மகாத்மா காந்தி கண்காட்சி நடத்தி வரும் அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகாசிரியர் விஜயகுமாரால் காந்திய சிந்தனைகள் எடுத்துரைக்கப் பட்டது.
நிகழ்வின் முன்னதாக கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மணி வரவேற்க , ஐஸ்வர்ய லெஷ்மி நன்றிக் கூறினார். யூத் ரெட் கிராஸ் தலைவர் சுவாமிநாதன், செயலர் சூர்ய நாராயணன், இணைச் செயலர் கல்பனா, பொருளாளர் ஜெய் கிருஷ்ணன், சுதர்சன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
செய்தி:அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










