வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது, ரூ.3,54,250 பணம் பறிமுதல்.!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், மலை ஓரங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் DSP.பவித்ரா மேற்பார்வையில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதிக்குமார் சார்பு ஆய்வாளர் வேலுமணி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது
வடமதுரை, திண்டுக்கல் சாலையில் முனியாண்டி கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய வேடசந்தூரை சேர்ந்த அருண்குமார், ஈஸ்வரன் திருச்சியை சேர்ந்த செந்தில்குமார், அடைக்கண் சாணார்பட்டியை சேர்ந்த கருணாகரன், சிலுவத்தூரை சேர்ந்த முத்துவிஜயபாண்டி, சம்பத், உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3,54,250 பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

