இராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றில் சாலை ஓர மரங்கள் சாய்ந்தன. ராமநாதபுரம் ஓம்சக்தி நகர், சாத்தக்கோன் வலசை, ஆர் எஸ் மங்கலம், பாரனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சாய்ந்த மரங்களை பேரிடர் மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தினர். மண்டபம் ஒன்றியம் கீழ நாகாச்சி ஊராட்சி அருகே வெள்ளமாசி வலசை வெள்ளைச் சாமி அஞ்சனாதேவி என்பவரது ஓட்டு வீடு சேதமானது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் 18 நிவாரண முகாம்களில் 560 குடும்பங்களைச் சேர்ந்த 567 ஆண்கள், 939 பெண்கள், 617 குழந்தைகள் என 2123 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தல் படி நியமிக்கப்பட்டுள்ள மண்டல அளவிலான நிவாரண குழு பணியாளர்கள் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு 3 வேளை உணவு, குடிநீர் வழங்கி வருகின்றனர். மிதமான காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. கடல் அலைகள் அமைதி காத்துள்ளன. பாம்பன் பாக் ஜல சந்தி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் பாம்பன் சின்னப்பாலம் மன்னார் வளைகுடா கடற்கரைக்கு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம், கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமாகும் வாய்ப்புள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி கடலோரப் பகுதியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நிவாரணம் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1988 முதல் தொடங்கிய பாம்பன் சாலை பாலத்தில் வாகன போக்குவரத்து நேற்று (15.11. 182 மாலை 6 மணி முதல் இன்று (16.11.18) காலை 6 மணி வரை நிறுத்தப்பட்டது. கடற்கரை பூங்காக்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தனுஷ்கோடி கடல் பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் மீனவர் வேலு தனது விசைப்படகை தோணித்துறை கடல் பகுதியில் நிறுத்தியிருந்தார். காற்றின் வேகத்தால் நங்கூரம் அறுந்து சேதமடைந்து தரை தட்டியது.
கஜா புயல் அபாயத்தால் மண்டபம் வட கடல் (பாக் ஜல சந்தி) பகுதியில் இருந்து பாம்பன் பாலம் வழியாக தென் கடல் (மன்னா வளைகுடா) பகுதிக்கு இப்படகு நேற்று கொண்டு செல்லப்பட்டது. சேதமடைந்த படகின் மதிப்பு ரூ.2.50 லட்சம். நவ.16 காலை 7 மணி நிலவரப்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ.. வாலிநோக்கம் – 67.8
மண்டபம் – 58
ராமேஸ்வரம் – 50.2
தங்கச்சிமடம் – 47.4
பாம்பன் – 45.3
திருவாடானை – 28.8
பரமக்குடி – 28
தொண்டி – 26.2
ஆர் எஸ் மங்கலம் – 25
தீர்த்தாண்டதானம் – 21
வட்டாணம் – 16
பள்ளமோர்குளம் – 15.5
ராமநாதபுரம் – 12.5
முதுகுளத்தூர் – 10.6
கடலாடி – 7.6
கமுதி-6.3

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









