பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தலைவர் விஜய்!- ஜி. ராமகிருஷ்ணன் கடும் தாக்கு..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது கோவை மாவட்ட மாநாடு கோவை வரதராஜபுரம் பகுதியில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது.மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொடக்க நிகழ்ச்சியாக கோவையின் வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியை அந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் திறந்துவைத்தார். பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதிகளை அக்கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.இதையடுத்து முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:-இந்தியாவில் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. தனது சொந்த காலில் நிற்க முடியாமல் பிற கூட்டணி கட்சிகளை சார்ந்து தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலைவந்துள்ளது. பா.ஜ.க. அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத கொள்கையை கடைபிடிக்கும் அரசாகவும் உள்ளது. பல இடங்களில் சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ஆட்சியை பிடித்தால் என்ன செய்வார் என நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒரு கம்பெனிக்கு வொர்க்பிரம் ஹோம் பண்ணலாம். அரசியலில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து உழைப்பாளர் பேரணியும், மசக்காளிபாளையத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!