அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில், பல்வேறு திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்:

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சரந்தாங்கி கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் ஒரு கோடியே 40 லட்சத்து செலவில் தானியக்களம் இதே போன்று சேந்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துகம்பட்டி கிராமத்தில் தானியக்களம் ராஜாக்கல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மறவபட்டி கிராமத்தில் மந்தைகுளம் ஊரணி சுற்றுச்சுவர், கீழசின்ணனம்பட்டி ஊராட்சியில், பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் மற்றும் தானிய களத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் தொகுதி வெங்கடேசன், எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அருகில், திமுக மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாராஜன், ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சுஅழகு, துணைத்தலைவர் சங்கீதா மணிமாறன்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் அருண்குமார், ராதாகிருஷ்ணன், பாலமேடு நகர செயலாளர் மனோகராவேல் பாண்டியன், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் விஜயலட்சுமி முத்தையன், பெருமாள், பழனிச்சாமி, , ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் கோபால், தர்மராஜா, ஆனணயூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுந்தர், மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மாவட்டத் துணை அமைப்பாளர் பிரதாப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதீஷ், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!