தஞ்சையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா…

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா தஞ்சையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்டத் தலைவர் கருப்பசாமி சங்க கொடியினை ஏற்றி வைத்தார்.

மாவட்டத்துணை தலைவர்கள் கனகராஜ், சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குணசேகரன் துவக்கவுரையாற்றினர்.

தமிழ்நாடு இரண்டு சக்கர மோட்டார் வாகன ஒட்டுனர் பாதுகாப்பு சங்க மாநிலதலைவர் பிரகலாதன் சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜரத்தினம் , கல்யாண சுந்தரம், சத்தியசீலன், ராஜன், சரவணபால்ராஜ், ஜெயராமன், சண்முகம், ஆறுமுகம், சுப்ரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதி 309ன் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியின் படி ஓய்வூதியர்களுக்கு அகவை 70 ன் போது 10 சதவீதம் கூடுதல் ஓய்வு விதம் வழங்கிட வேண்டும் , சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கால முறை ஊதியமும். ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும் மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும்.

கிராமப்புற உதவியாளர்கள் பதவி உயர்வில் சென்றவர்கள் பெறவேண்டியதை விட குறைவான ஓய்வூதியம் பெற்று வருவதை விரைவில் சரி செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை குறைவதோடு திட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் மட்டுமே செயல்படுத்திடவும், விருப்பம் இல்லாதவர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல 1000 ரூபாய் மருத்துவ படி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!