ஐக்கிய அமீரகத்தில் ஜூலை மாதம் வந்து விட்டால் கோடையின் வெப்பம் சில நேரங்களில் 50 டிகிரி செல்சியஸை கடந்து விடுகிறது. தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையான அனலும், புளுக்கமும் அதிகரித்து உள்ளது. அமீரக வாசிகள் வெப்பத்தின் தாக்கத்தை புதுமையான முறையில் நிரூபித்து அதை வீடியோவாக சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

அந்த விடியோவில் ஒருவர் எந்த வித எரிவாயு இல்லாமல் பொறிக்கும் சட்டியை சூரிய வெப்பத்தில் 10 நிமிடம் வைத்த பிறகு 1 நிமிடத்தில் எவ்வாறு முட்டை பொறிக்க முடியும் என்பதை படம் பிடித்து வெப்பத்தின் உச்சத்தை விளக்கியுள்ளார்.
இந்நிலையில் வரும் நாட்களில் புற நகர் பகுதிகளில் 49 டிகிரி செல்சியஸை தாண்டும் என தேசிய சீதோஷன & வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










Good news