சவுதி அரேபியா ஜித்தாவில் விளையாட்டு புதிய உத்வேகத்துடன் FRIENDS REPUBLIC CLUB..

சவுதி அரேபியா ஜித்தாவில் இயங்கி வரும் FRIENDS REPUBLIC CLUB எனப்படும் அமைப்பு ஜித்தாவில் பணிபுரியும் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களை உள்ளடக்கி கடந்த பல வருடங்களாக இயங்கி வந்தது.

கடந்த 12.01.2018 அன்று முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாக அதற்கான பிரத்யோக அனையாளச் சின்னத்துடன் மக்களுக்கு ZAFIRO FINE DINING என்ற ஹோட்டலில் அறிமுகம் செய்யப்பட்டது.  இவ்வமைப்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் பல மாநிலத்தைச் சார்ந்தவர்கள் உறுப்பினராக இணைந்து கிரிக்கெட், வாலிபால், கூடைப்பந்து மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வருகிறார்கள்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை வடக்குத் தெரு ஹமீது ராஜா மற்றும் பல கீழக்கரை வாலிபர்களை உள்ளடக்கிய  அணி ஜித்தாவில் நடந்த வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

12.01.2018 அன்று நடந்த அமைப்பின் அடையாளச் சின்னம் அறிமுக விழாவில் மலையாள நியூஸ் பத்திரிக்கையாளர் முசாஃபிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இவ்வமைப்பின் தலைவர் வாஸ் மற்றும் பொதுச் செயலாளர் ஃபில்பர்ட் மேத்யூ மற்றும் இவ்வமைப்பின் வெவ்வேறு மாநிலத்தைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “சவுதி அரேபியா ஜித்தாவில் விளையாட்டு புதிய உத்வேகத்துடன் FRIENDS REPUBLIC CLUB..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!