பத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகியிருக்கும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கும் நபருக்கு தினம் ரூபாய்.100 பயணப்படியாகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முகாமில் ஏசி மெக்கானிக் ( AC Mechanic), ப்ரிட்ஜ் மெக்கானிக் (Fridge Mechanic), எலக்ட்ரிசியன் (Electrician), உணவு தயாரிப்பு (Food Production) போன்ற பயிற்சிகள் வழங்கப்படும் என்று பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார். இது சம்பந்தமான மேல் விபரங்கள் மேலே தரப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









