வேலூர் தனியார் மருத்துவமனையில் 21ம் ஆண்டு இலவச அறுவை சிகிச்சை முகாம்..

வேலூர் இந்திரா நர்சிங் ஹோமில் 21-ம் ஆண்டு இலவச அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதன் நிர்வாக இயக்குநர் சங்கர் முகாமை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் டாக்டர் சங்கர் மூலம் பொது அறுவை சிகிச்சைக்கும்,  டாக்டர் லதா கர்ப்பபை கோளாறுகளுக்கும்,  டாக்டர் ரமணக்குமார் எலும்பு முறிவு மற்றும் தண்டுவடம் பிரச்னைகளுக்கும்,  டாக்டர் முத்துக்குமரன் இதய நோயாளிகளுக்கும்,  டாக்டர் வேலவன் கதீர் லீச்சு மற்றும் புற்றுநோய்களுக்கு ஆலோசனை பரிசோதனை செய்தனர்.

இம்முகாமில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டன். இதில் அரசு காப்பீடு திட்டத்தில் இருப்பவர்களுக்கு சலுகையும் மற்றவர்களுக்கு 50 சதவித சலுகை கட்டணம் அளிக்கப்படுவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் 130 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

கே எம்.வாரியார், செய்தியாளர்- வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!