தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,பாதிரகுடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் பெண்கள் நலன் தன்னார்வலர்கள் ராகினி மற்றும் பரமேஸ்வரி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பின் அளவை சரி பார்த்து மருத்துவ உதவி தேவைப்படுவார்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரத்தை அணுகுமாறு ஆலோசனை வழங்கினார்கள் .
இம்மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 55-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக தஞ்சாவூர் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
You must be logged in to post a comment.