இராமநாதபுரத்தில் இலவச கண் மருத்துவ முகாம்..வீடியோ..

இராமநாதபுரத்தில் அன்பு அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவக்கி வைத்தார். முகாமில் பங்கேற்ற 350 பேரில் கண் குறைபாடு என கண்டறியப்பட்ட 80 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயர் ரத்த அழுத்த நோய், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய் என அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மருந்து வழங்கப்பட்டன.

கண் குறைபாடு நோய் உள்ளவர்களை கண்டறிந்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. 40 வயதிற்கு மேல் உள்ளவருக்கு கண் நீர் அழுத்த நோய் கண்டறிந்து மருந்து வழங்கப்பட்டது. அன்பு நிறுவன அறக்கட்டளை அம்புரோஸ் ,ஜான் பிரிட்டோ , சார்லஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். முகாம் அமைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் இம்முகாமை ஒருங்கிணைந்து செயல்படுத்தினார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!