கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

கீழக்கரையில் 17-03-2017 (வெள்ளிக்கிழமை) அன்று, கீழக்கரை புதுத்தெருவில் பல்வேறு சமுதாய பணிகளை பொதுமக்கள் நலனுக்காக செய்து வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இச்சிகிச்சை முகாமுக்கு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் (MYFA) தலைவர்.S.A.C.பவுசுல் அலியூர் ரஹ்மான் தலைமை வகிக்கிறார், மேலும் முன்னாள் MYFA & தெற்கு தெரு முன்னாள் செயலாளர்.S.M.சீனி அப்துல் காதர் வாழ்த்துரை வழங்குகிறார். நன்றியுரையை நூரானியா பள்ளியின் தாளாளர். S.M. சுபைர் அவர்கள் வழங்குகிறார்கள்.

இம்முகாம் புதுத்தெரு நூரானியா பள்ளி வளாகத்தில் உள்ள பல்லாக்கு ஹாஜியார் அரங்கில் நடைபெறுகிறது.  இம்முகாம் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறுகிறது. மேலும் முகாமின் ஏற்பாடுகளை MYFA சங்க உறுப்பினர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

மேலும் இம்மருத்துவ முகாம் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி நிறுவனர்.சேதுராமன் மற்றும் அவருடைய மருத்துவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!