இராமநாதபுரம் தொண்டியில் இலவச பொது மருத்துவ முகாம்..

இராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி ரோட்டரி கிளப் மதுரை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் மன்றம் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
இம்முகாம் தொண்டி அருகே வெள்ளையாபுரம்  கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இம்முகாமை இராமநாதபுரம் ரோட்டரி கிளப் பட்டய தலைவர் வழக்கறிஞர் இரவிச்சந்திர ராமவண்ணி துவக்கி வைத்தார்.  இம்முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் , மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சை, இரப்பை மற்றும் குடல் நோய்கள் , சிறுநீரக பித்தப்பை கற்கள் அகற்றம் , கற்பப்பை அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிறப்பு பரிசோதனை மற்றும் ஆலோசனை சம்பந்தப்பட்ட துறை நிபுனர்களால் வழங்கப்பட்டது.
மேலும் இம்முகாமில் மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கபட்டது. இந்த முகாம் ஏற்பாடுகளை தொண்டி ரோட்டரி கிளப் தலைவர் சண்முகம்,  பட்டய தலைவர் ஷேக் மஸ்தான் இராஜா, பொருளாளர் கபீர் சாதிக், வெற்றிவேலன்,ஆசிரியர்  பழனி ஆகியோர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!