மதுரை மாவட்டம் வாலாந்தூர் அருகே சின்ன குறவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவரின் மகளான கனிஷ்கா மதுரை பசுமலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இவர் பள்ளிக்கு செல்வதற்கு தினசரி வாலாந்தூரிலிருந்து அரசு பஸ்ஸில் காளவாசல் சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்தில் பள்ளி செல்வது வழக்கம் இந்த நிலையில் இன்று காலை 7.50 மணி அளவில் கனிஷ்கா மற்றும் அவரது தாயாரை சரவணக்குமார் சின்ன குறவகுடியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வாலாந்தூரில் டிஎன் 63 13 77 என்கொண்ட வாலாந்தூர் டு பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில் அனுப்பி இருக்கிறார் பேருந்து சென்ற சிறிது நேரத்தில் கனிஷ்காவின் தாயார் சரவணகுமார் மொபைலுக்கு போன் செய்து நடத்துனர் டிக்கெட் எடுக்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் தொடர்ந்து தகராறு செய்வதாகவும் தகவல் சொல்லி இருக்கிறார்
இது குறித்து சரவணகுமார் கூறுகையில் தினசரி எனது மகள் கனிஷ்காவை இருசக்கர வாகனம் மூலம் வாலாந்தூர் சென்று அரசு பேருந்தில் பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து நான் பணிக்கு செல்வது வழக்கம் இந்த நிலையில் இன்று காலை 7.50 மணிக்கு டிஎன்63 1377 எண் கொண்ட வாலாந்தூர் டு பெரியார் பேருந்து நிலையம் செல்ல பேருந்தில் எனது மகள் மற்றும் மனைவியைஅனுப்பி விட்டு வந்த பிறகு பேருந்தில் சென்ற எனது மனைவி மற்றும் மகள் ஆகியோரிடம் டிக்கெட் எடுக்க சொல்லி வற்புறுத்திய நடத்துனர் தகராறு செய்வதாக எனது மனைவி போன் மூலம் எனக்கு தகவல் அனுப்பினார் பள்ளி யூனிபார்ம் மற்றும் ஐடி கார்டு உள்ளிட்டவை எனது மகளிடம் இருந்த நிலையில் டிக்கெட் எடுக்க சொல்லி நடத்துனர் வற்புறுத்தி தகராறு செய்தது எனது மகள் மற்றும் மனைவி ஆகியோருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது பஸ் பாஸ்ஸை மறந்து வீட்டில் வைத்து சென்று விட்டதாக எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதை காதில் வாங்காத நடத்துனர் கண்டிப்பாக டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என வற்புறுத்தி டிக்கெட் எடுக்க வைத்துள்ளார் மேலும் அது மகளிர் இலவச பேருந்து என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளார் தமிழக அரசும் போக்குவரத்து துறையும் மாணவ மாணவிகள் ஐடி கார்டு மற்றும் பள்ளி சீருடை அணிந்திருந்தால் டிக்கெட் எடுக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என உத்தரவு போட்டிருக்கும் நிலையில் நடத்துனரின் இந்த செயல் எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலையும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது பேருந்தில் அத்தனை பேர் மத்தியில் டிக்கெட் எடுக்க சொல்லி வற்புறுத்தி தகராறு செய்ததால் எனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் ஆகையால் சம்பந்தப்பட்ட பேருந்தில் பணி செய்த நடத்துனர் மீது போக்குவரத்து துறை முறையான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு கூறினார்
You must be logged in to post a comment.