தமிழகம், கேரளா மக்கள் மற்றும் அதிகமான கீழக்கரை இளைஞர்கள் இணைந்து கடந்து வருடம் ஆரம்பிக்கப்பட்ட கிளப் “FRIENDS REPUBLIC CLUB”. இந்த கிளப் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (23-02-2018) அன்று பல நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட மாபெரும் வாலிபால் போட்டி பின்மாலிக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் லெபனான், சிரியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா கிளப்கள் சார்பாக பல அணிகள் மோதினர். இறுதியாக முதல் பரிசு சவுதி ரியால்.5000/- மற்றும் கோப்பையை அஜீசியா கிளப் வென்றது. இரண்டாவது பரிசாக சவுதி ரியால் 3000/- மற்றும் கோப்பையை FRIENDS REPUBLIC CLUB(FRC) வென்றது.
இந்தொடரின் சிறந்த விளையாட்டு வீரர்களாக பாகிஸ்தானை சார்ந்த முகம்மது மற்றும் சிரியா நாட்டை சார்ந்த மாங்கோ ஆகியோரும், ஒட்டு மொத்த தொடர் நாயகனாக சவுதி வீரர் அஹமது தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புகைப்படத் தொகுப்பு





You must be logged in to post a comment.