ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகா கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் திமுக ஒன்றிய செயலாளர் மீது மோசடி புகார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கீழக்குளம் அருந்ததியர் காலணியில் 50 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு 36 பேருக்கு தலா 1.80 லட்சம் மதிப்புள்ள இலவச காலனி வீடுகள் அரசால் ஒதுக்கப்பட்டதாகவும் இந்த திட்டத்தின் படி வீடு கட்டித் தருவதற்கு முதுகுளத்தூர் திமுக ஒன்றிய செயலாளராக இருக்கும் சண்முகம் என்பவர் தலா ரூ ஐம்பதாயிரம் பெற்றுக் கொண்டதாகவும் ஆனால் இதுவரை வீடு கட்டிதரவில்லை என்றும் அரசின் காலனி வீடுகளை பெற்று தருவதற்கு தலா ரூ 50,000 லஞ்சம் வாங்கிக் கொண்டு தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து புகார் மனு அளித்தனர்
You must be logged in to post a comment.