மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பண வசூல் செய்யப்படுகிறது. பத்திரிகையாளர்கள் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருப்பதாக கூறி டாஸ்மாக் கடைகளில் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட பலர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர்…
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.