ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ‘கட்டிவயல்’ ஊராட்சி தலைவராக முத்துராமலிங்கம் (45) என்பவர் கடந்த 5 வருடமாக ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் எட்டுகுடி கிராமத்தைச் சேர்ந்த துரைமாணிக்கம் (42) என்பவரிடம் தனது தேவைக்காக 3 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக காசோலை ஒன்றை கொடுத்து அந்த காசோலை மூலம் இரண்டு மாத காலத்திற்குள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று உறுதி அளித்துள்ளார்.
அதை நம்பிய துரைமாணிக்கம் அவர் கூறிய தவணை காலத்தில் காசோலையை வங்கியில் செலுத்திய போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கத்தின் வங்கி கணக்கில் போதிய பணமில்லை என திரும்பி உள்ளது. இதனால் அதிர்ச்சியுற்ற துரைமாணிக்கம் ஏமாற்றமடைந்து, இது பற்றி முத்துராமலிங்கத்திடம் விசாரித்த போது, அவர் உரிய பதிலளிக்காததால் தாம் ஏமாற்றப்பட்டதையறிந்து மனமுடைந்து இந்த நம்பிக்கை மோசடி உழைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளார்
இதனையடுத்து, துரைமாணிக்கம் திருவாடானை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு செக் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு சமரச நீதிமன்றமான லோக் அதாலத் நீதிமன்றத்திற்கு கடந்த 13.08.2022 ம் தேதி மாற்றப்பட்டு சமரசம் செய்யப்பட்டு அதில் 3லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை என குறைக்கப்பட்டு சமரசம் செய்து வைத்து அன்றைய தினமே 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மீதி தொகை 2 லட்சத்து 90 ஆயிரத்தில் 07.09.2022ம் தேதி ரூ ஒரு லட்சத்து 50 ஆயிரமும், 27.09. 2022ம் தேதி 1 லட்சத்து 45 ஆயிரத்தை துரை மாணிக்கத்திடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் கொடுத்து விட வேண்டும் என நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் முடிக்கப்பட்டது
ஆனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால், துரைமாணிக்கம் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் தாக்கல் செய்தார். அந்த மனுவின் பேரில் முன்னாள் கட்டிவயல் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிமன்ற பிடிவாரண்டு உத்தரவுபடி,
தொண்டி சார்பு ஆய்வாளர் ராம்குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கத்தை கைது செய்து திருவாடானை நீதிமன்றத்தில் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
நீதிமன்றத்தில் ஆசர்படுத்தப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் ஐம்பதாயிரத்துறை செலுத்தி ஒரு மாத காலம் அவகாசம் கேட்டதன் பேரில் அவருக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து நீதிபதி உத்தரவிட்டார்
You must be logged in to post a comment.