கொடைக்கானலில் கொட்டும் பனியிலும் தொடரும் காட்டுத் தீ… வீடியோ..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சிலநாட்களுக்குமுன் 0″ டிகிரியை தொடர்ந்து பனிபிரதேசமாக மாறியது பின்னர் தினமும் உறைபனி தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

அதே சமயம் இன்று பல இடங்களில் குறிப்பாக கோவில் பட்டி, சிட்டி டவர், மற்றும் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை அருகில் வெள்ளைப்பாறை மற்றும் வனப்பகுதியிலும் மற்றும் பட்டா இடங்களிலும் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து விலை உயர்வான மரங்கள் தீயில் கருகியது.

இதை மாவட்ட வனத்துறையும் கண்கானித்து காப்பு காடுகளையும் வனவிலங்குகள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று இயற்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தி:- கொடைக்கானல்ர,ரஜினி….

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!