களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் பயங்கர தீ விபத்து…

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அரிய வகை மூலிகைகள் சந்தனம், தேக்கு உள்ளிட்ட ஏராளமான அரிய மரங்கள் உள்ளன. இங்கு புலிகள், சிறுத்தை, யானை, கரடி, உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும் வசித்து வருவதால் களக்காடு, முண்டந்துறையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.

தற்போது வனப்பகுதியில் வெயில் கொளுத்துவதால் வெப்பம் அதிகமாகி அடிக்கடி தீப்பற்றிக் கொள்ளும் நிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட பாண்டியன் கோட்டை பகுதியில் தீப்பிடித்தது. அங்குள்ள புல், பூண்டுகள், மரங்களில் தீப்பற்றி எரிந்தது.

காற்றின் வேகத்தால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால் வனத்துறையினர் மிகவும் போராடி அங்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. நேற்று காலை முண்டந்துறை வனசரகர் சரவணகுமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ பற்றி எரிவதால் அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!