கொரோனாவால் 144 தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலே முடக்கப்பட்டன பின்னர் படிப்படியாக தடை தளர்க்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரத்தொடங்கினர் .பொதுமக்களை
கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டு வந்த நிலையில் போதிய காவலர்கள் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்குடன் காவல்துறை சார்பில் தன்னார்வலர்களை கொண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களை உதவிக்காக பணியில் சேர்த்தனர். இதனை தவறாக பயன்படுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த கமல கண்ணன்(23) சீர்காழி காவல் நிலையத்திலிருந்து தனிநபராக வெளியே வருவது போன்று செல்போனில் வீடியோ எடுத்து கேங்ஸ்டார் பாடலுடன் டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார் .இது சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சீர்காழி போலீசார் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டிக் டாக் வெளியிட்ட கமலக்கண்ணனை கைது செய்துள்ளனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.