இராமநாதபுரம் மாவட்ட ஐவர் கால் பந்து போட்டி முதுனாள் அணி சாம்பியன்…

இராமநாதபுரம் சின்னக் கடை கால்பந்தாட்ட அணி சார்பில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் கோவை, நாமக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், இளையான்குடி உள்பட 40 அணிகள் கலந்து கொண்டன.

இன்று மாலை நடந்த இறுதிப் போட்டியில்.2:1 என்ற கோல் கணக்கில் முதுனாள் கால்பந்து அணி, இராமநாதபுரம் சேதுபதி அணியை வென்றது. குப்பன்வலசை, பெருங்குளம் அணிகள் மூன்றாம், நான்காம் பரிசு பெற்றன. குப்பன் வலசை அணி வீரர் பிரவீன் தனி நபர் கோப்பையையும், முதுனாள் அணி வீரர் முத்து தொடர் நாயகன் கோப்பையையும் தட்டிச் சென்றனர்.

போட்டிகளில் வென்ற அணி வீரர்களுக்கு நன்கொடையாளர்கள் சார்பில் அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் செ. முருகேசன் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார். டாக்டர் பெரோஸ் கான், இராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா உசேன் (அதிமுக), அயூப் கான் (அதிமுக), மோகன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் குணா, தொழிலதிபர் பைசல், இராமநாதபுரம் சட்டசபை தொகுதி முன்னாள் செயலாளர் தஞ்சி சுரேஷ், ம.தி.மு.க., மாணவரணி மாவட்ட செயலாளர் அரு.சுப்ரமணியன், இராமநாதபுரம் நகர் 19வது வார்டு அதிமுக செயலாளர் ஆதில் அமீன் , சமூக சேவகர் மங்களநாத சேதுபதி உள்பட பலர் பங்கேற்றனர். போட்டி ஏற்பாடுகளை சின்னக் கடை கொலபசி நண்பர்கள் மற்றும் கால்பந்து அணி மேலாளர் அயூப்கான் தலைமையில் நிர்வாகிகள், குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!