இராமநாதபுரத்தில் மல்லி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் சார்பாக லிமிட்லெஸ் டர்ஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசினை பெரியபட்டினம் A அணியினரும் இரண்டாவது பரிசினை குப்பன் வலசை அணியினரும் மூன்றாவது பரிசினை கீழக்கரை அணியினரும் நான்காவது பரிசினை பெரியபட்டினம் B பெற்றனர். சிறந்த கோல் கீப்பருக்கான விருதினை PFC A அணியின் மசூத் குப்பன் வலசை அணியின் மாசானம் ஆகியோர் சிறந்த வீரருக்கான விருது பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கும் வீரர்களுக்கும் மல்லி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் உரிமையாளர் பொறியாளர் கருணாகரன் லிமிட்லெஸ் டர்ஃப் மைதானத்தின் உரிமையாளர் சைம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.