இராமநாதபுரம் மாவட்ட கால்பந்து போட்டி : காரிக் கூட்டம் அணி கோப்பை வென்றது…வீடியோ..

இராமநாதபுரம் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் சாத்தான்குளம் நூருல் இஸ்லாம் வாலிபர் முன்னேற்றச் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான கால் பந்து போட்டி நடந்தது.

கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய போட்டியில் இளையான்குடி, சாத்தான்குளம், மண்டபம், வலசை, காரிக் கூட்டம், பனைக்குளம், அழகன்குளம், பெரிய பட்டணம் உள்பட 10 அணிகள் கலந்து கொண்டன. இறுதி ஆட்டத்தில் காரிக் கூட்டம், முனியன்வலசை அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர நிறைவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சம நிலை எட்டின. இதையடுத்து பெனால்டி முறையில் 4 : 3 என்ற கோல் கணக்கில் காரிக் கூட்டம் அணி கோப்பையை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சாத்தான்குளம் ஜமாத் தலைவர் எச்.காபத்துல்லா ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.

சக்கரக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எம்.நூர் முகமது, அயூப்கான், ஹாஜி நாசர், டத்தோ ஹக்கீம், டத்தோ ஹக்கீம் ஷா, வாணி ஜமாத் தலைவர் ஷாலிப், சிராஜ்தீன், சாத்தான்குளம் நூருல் இஸ்லாம் வாலிபர் முன்னேற்ற சங்க தலைவர் சதாம் உசேன், செயலாளர் சபீர் அலி, பொருளாளர் யூசுப், ஹாஜி இ. நஸார், ஒய்.நஸார், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து கழக துணைத் தலைவர் ராஜா, செயலாளர் குலசேகர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். இராமநாதபுரத்தைச் உடற்கல்வி ஆசிரியர்கள் சிவக்குமார், பிரபாகரன், முனியசாமி, பாரதி குமார், ஜெகதீஷ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!