கீழக்கரை அசைவ உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு..

இராமநாதபுரம், செப்.19- நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் கடந்த 16 ஆம் தேதி ஷவர்மா, பிரைடு ரைஸ், நான், தந்துாரி உள்ளிட்ட அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வயிற்று போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி ஏற்பட்டது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் சிறுமி ஒருவர் இறந்தார். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 3 சிறுவர்கள், கர்ப்பிணி உள்பட 43 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதனை தொடர்ந்து மாநிலம் உள்ள அசைவ உணவு ஓட்டல்கள், கடைகளில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு ஆணையர் உத்தவிடப்பட்டது.

இதன்படி, ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி, மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் வழிகாட்டல் படி  கீழக்கரை நகரில் உள்ள அசைவ உணவு கடைகளில் ஷவர்மா தயாரிப்பு குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, துப்புரவு மேற்பார்வையாளர் சக்திவேல் ஆய்வு நடத்தினர். அங்கு இருந்த பொறித்த சிக்கன் 4.5 கிலோ, நிறுவன பெயர், தயாரிப்பு, காலாவதி தேதி வில்லை ஒட்டப்படாத உணவு 2 கிலோ, அதிக நிறமி சேர்க்கப்பட்டு தயாரான சட்னி வகைகள் பறிமுதல் செய்து அளித்தனர். இது தொடர்பாக 3 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!