இராமநாதபுரம் அருகே அழகன்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் உணவு திருவிழா விமர்சையாக நடந்தது. இராமநாதபுரம், பனைக்குளம், அழகன்குளம் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் கை வண்ணத்தில் தயாரான இயற்கை உணவை மிகவும் ருசித்து சாப்பிட்டனர். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி பச்சை பயறு பாயாசம், ரவா உருண்டை, கொழுக்கட்டை, பாலக்கீரை வடை, நவதானிய சாலட்டு, சோமாஸ், நல்ல பழங்கள் கொண்ட தண்ணீர், வீட்டு சமையலில் தயாரான பிரியாணி, சோமாஸ் என அறு சுவை உணவு வகைகளை மாணவர்கள் பல்வேறு குழுக்களாக தாங்களாகவே சமைத்து உணவு திருவிழாவில் விற்பனைக்கு வைத்தனர்.
இயற்கை உணவுகள் சாப்பிடுவதால் புரதச் சத்து மற்றும் இயற்கை உணவு வகைகளை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு உணவே மருந்து தீர்வு என இயற்க உணவு குறித்து மக்களிடம் மாணவர்கள் விளக்கினர். இயற்கை உணவுகளின் நன்மைகளை புரிந்து கொண்ட மக்கள், மாணவர்கள் தயாரித்த உணவை விரும்பி ருசித்தனர். நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த உணவு திருவிழாவை பள்ளி நிறுவனர் ஹாஜி. ஹலிபுல்லாகான் வழிகாட்டுதல் படி தாளாளர் ஹாஜி. பவுசல் ஹனியா, இயக்குநர் முகமது இப்ராஹிம் ஷா ஆகியோர் உணவு திருவிழாவை துவக்கி வைத்தனர். உணவு திருவிழாவில் சமையல் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை வெகுவாக பாராட்டினர். உணவு வகைகளை சாப்பிட்டு மசிழ்ந்தனர். பள்ளி துணைத்தலைவர் முகமது ஷராபதுல்லா தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்தனர்.


You must be logged in to post a comment.