பாம்பன் கடலோசை எப்.எம் மற்றும் சத்துணவுதுறை இணைந்து நடத்தும் ஊட்டச்சத்து உணவுத்திருவிழா மற்றும் கண்காட்சி.

பாம்பன் நேசக்கரங்கள் அறக்கட்டளை சமூதாய வானொலியான கடலோசை எப்.எம் சார்பாக மத்திய அரசின் திட்டமான போஷன் அபியான் திட்டம் குறித்து மாவட்ட சமூகநலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டதுறையுடன் இணைந்து சத்தான உணவுகள் குறித்த உணவுத் திருவிழாவின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.சத்தான உணவுகளான தானிய வகைகள் பழங்கள் கீரைகள் மற்றும் விளக்க படங்களை கொண்ட அறங்கம் மக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தை விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக சத்தான உணவு பரிசு போட்டியும் அதை தொடர்ந்து குழந்தைகள் மற்றும் மகளீர்களுக்கு இரத்த அளவு ஹீமோகுளோபின் சோதித்தல் இலவசமாக நடைபெற்றது இதில் டாக்டர் திரு.இளையராஜா அவர்கள் பங்களிப்பு செய்தார் மேலும் இந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து தலைமை ஏற்று வழி நடத்தினார் பாம்பன் கடலோசை FM வானொலியின் இயக்குநர் திருமதி.காயத்ரி அவர்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!