வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநில மக்களுக்கு  உதவிக்கரம் நீட்டும் விதமாக  உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக பொருள் அனுப்பி வைக்கப்பட்டது..

கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும்  விதமாக, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து (16.8.2018) அன்று மாவட்ட ஆட்சித்  தலைவர் முனைவர் ச.நடராஜன் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின்  சார்பாக,  மாவட்டத்தில் உள்ள பல்வேறு வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன்  சேகரிக்கப்பட்ட ரூ.5 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வாகனத்தின் மூலம் வழியனுப்பி வைத்தார்.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கோரளாவில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால்  பெரும் வெள்ளம் ஏற்பட்டு கேரளா மாநில பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளான சூழ்நிலை நிலவி வருகிறது.  இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள கேரளா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக, இராமநாதபுரம்  மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக நிவாரணப் பொருட்கள்  சேகரிக்கப்பட்டது.  குறிப்பாக அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள்ரூபவ் புதிய ஆடைகள், போர்வைகள், பெட்சீட்டுகள்ர, மாணவ, மாணவியர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள் என மொத்தம் ரூ..5 இலட்சம்  மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இப்பணியில் இராமநாதபுரம் வர்த்தகர்கள் சங்கம்,  இராமநாதபுரம் மளிகை வியாபாரிகள் சங்கம்,  ஆயிர வைசிய மகாஜன சபை,  இராமநாதபுரம்,  பரமக்குடி, தொண்டி,  உச்சிப்புளி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி, தங்கம் மற்றும் வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம்  மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தன்னார்வமாக பங்களிப்பு செய்தனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு,  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து இன்றைய தினம் எய்ச்சர் (EICHER) லாரி  வாகனத்தின் மூலம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.நடராஜன், வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.   இந்நிவாரணப் பொருட்கள்  அனைத்தும் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரணப்  பொருட்கள் சேகரிப்பு பிரிவில் கொண்டு சேர்க்கப்படவுள்ளது.  இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி,  மாவட்ட உணவு பாதுகாப்பு  மற்றும் நியமன அலுவலர் டாக்டர்.ஜெ.ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகியோர் உட்பட பங்களிப்பு செய்த அனைத்து சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!