மதுரை பகுதிகளில் இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணியினர் வீடு வீடாக சென்று தேசியகொடி வினியோகம்..

வருகின்ற 2023 ஆகஸ்ட் 15ம் தேதி 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றி அனைவரும் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமாக கொண்டாட வேண்டும் என நம் பாரதபிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். பாரதபிரதமரின் வேண்டுகோளை ஏற்று மதுரை மாவட்டம் இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணி மாநில செயலாளர் குணா தேசியகொடியினை வாங்கி  பைக்ரா,திருப்பரங்குன்றம், திருநகர் போன்ற பகுதிகளில் வீடுகளுக்கே நேரில் சென்று வினியோகம் செய்தார். அப்போது அவருடன் 

இமக ஆன்மீக அணி மாவட்ட தலைவர் முத்துக்குமார், துணைத்தலைவர் விக்னேஷ், புறநகர் தலைவர் விஜயபாஸ்கர சேதுபதி, அமைப்பாளர் ரவிசாமி மற்றும்  பலர் உடன் இருந்தனர். தேசியகொடிகள்  பூங்கா பகுதிகளிலும் மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் வழங்கப்பட்டு தேசிய கொடிகளை வீடுகளிலும் முதியோர் இல்லங்களிலும் பறக்க விடப்பட்டன.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!