முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொடி நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி 05/12/2018 அன்று மாலை 01.00 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வு அரபித்துறைத் தலைவர் ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.A.P.நாதிரா பானு கமால் வரவேற்புரை அளித்தார். துணைப் படை வீரர் திரு.சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு படைவீரர்களுக்கு நிதி வழங்கும் நாளாக டிசம்பர் 07 அனுசரிக்கப்படுகிறது.
மேலும் இந்த நாள் கொடி நாளாகவும் கருதப்படுவதையும், முன்னாள் படைவீரர் மற்றும் நலிவடைந்த படைவீரர்களின் குடும்பத்திற்கும் நிதி வழங்கப்படுவதையும் எடுத்துரைத்தார். இறுதியாக கல்லூரி முதல்வர்க்கு கொடியும், ஒட்டுப்படமும் வழங்கி இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













