ராமநாதபுரம், ஜன.12- ராமேஸ்வரம் மீன்பிடி தங்குதளத்தில் இருந்து 477 விசைப்படகுகள் நேற்று முன் தினம் காலை தொழிலுக்குச் சென்றன. இப்படகுகள் நேற்று அதிகாலை முதல் கரை திரும்பின. அப்படகுகளில், ராமேஸ்வரம் உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி அறிவுறுத்தல் படி மீன்வள ஆய்வாளர் ஆர்த்தீஸ்வரன், கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குமரவேல், கடல் வள மேற்பார்வையாளர் குத்தாலிங்கம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட படகுகள் தொடர்பான ஆய்வில் 47 படகுகள் இரட்டை வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததாக சிக்கின. இப்படகுகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளத்துறை துணை இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

You must be logged in to post a comment.