கீழக்கரை கடல் தொழிலாளர் சங்கம், நாட்டுப்படகு மற்றும் மீன் தொழிலாளர்கள் இணைந்து இன்று (17/12/18) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் 3 கடல் மைல் (சுமார் 12 கிலோ மீட்டர்) தூரத்திற்கு அப்பால் சென்று விசைப்பிடி படகுகளில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் மற்றும் 7 அம்ச கோரிக்கையை வழியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
கீழக்கரையில் புதிய மீன்கடையில் மீன்கடைகள் இல்லாததால் வெறிச்சோடி கிடந்தது. இதனால் பழைய மீன்கடை வழக்கத்தை விட வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது.
தகவல்: மக்கள் டீம்




You must be logged in to post a comment.