இராமநாதபுரம் கடலோர குழுமம் மாவட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் அறிவிப்பின் படி வேம்பார் மீனவர்களுக்கு கடலோர காவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு ஆய்வாளர் முகேஷ் ஜெயகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வருகை தந்திருந்த மீனவர்களுக்கு சுருக்கு மடி வலை மற்றும் அரசால் தடை செய்த கடல் அட்டை மற்றும் அரிய வகை உயிரினங்களை பிடித்தல் கூடாது ௭ன அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் கடத்தல் மற்றும் அன்னியர்கள் நடமாட்டம் இருந்தால் 1093 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களை கொடுக்கலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்புகொண்டும் தகவல் கொடுக்கலாம் என மீனவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.


Masah Allah best of luck
All the best