கேரள கடலில் தவறி விழுந்து இராமேஸ்வரம் மீனவர் பலி..

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அருகே தண்ணீர் ஊற்று சீதாங்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் அந்தோணி வின்கேட், 30. மீனவரான இவர் கேரளா கடல் பகுதியில் மீன்பிடித்து வந்தார். நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கயிறு இடறி நிலை தடுமாறி கடலில் விழுந்து உயிரிழந்தார்.

இவரது உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி, இரண்டு மகள், மகன் உள்ளனர். அவரது குடும்பத்திற்கு தமிழக, கேரள மாநில அரசுகள் போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!