உலக மீனவர் தினம்… மீனவ கிராமங்களில் சிறப்பு பிரார்த்தனை..

உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்குடி, பள்ளம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருபலிக்கு பின்னர் தங்களை வாழ வைக்கும் கடல் அன்னைக்கு மீனவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மீன்பிடித்தொழிலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மீனவர்கள், தங்களுக்கு வாழ்வளிக்கும் கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக, மலர் தூவி மரியாதை செலுத்துவது வழக்கம், அதன்படி இன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நீண்ட தூர மீனவ கிராமங்களை கொண்டு இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளம், மேல மணக்குடி, மனக்குடி உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனை, சிறப்பு திருப்பலிகளில் பங்கேற்ற மீனவர்கள் பிரார்த்தனைக்கு பின்னர் தங்களை வாழ வைக்கும் கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், மேலும் தங்கள் கட்டுமரம், வல்லம் மற்றும் மீன் பிடி உபகரணங்களுக்கும் மலர் தூவி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இது குறித்து மீனவர்கள் கூறும் போது, புற்றுநோயை ஏற்படுத்தும் அகல் ஆராய்வை அரசு கைவிட வேண்டும், கப்பல் வழிதடத்தை 12 நாட்டிக்கல்லில் இருந்து 60 நாட்டிக்கல் தூரம் கடலுக்குள்ளாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், குமரிமாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர், மீனவர் தினத்தை கொண்டாடும் வகையில் கட்டுமர போட்டிகள், நீச்சல் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .  

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!