நாட்டுப் படகுகளுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம், வேதாளை பகுதிகளைச் சேர்ந்த 2 நாட்டுப் படகுகளில் 9 மீன கவர் சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளை சுற்றி வளைத்து அதிலிருந்த மீனவர்கள் கோவிந்தராஜ், பெரியசாமி, ரகு, காளிதாஸ், ராம்குமார், செல்வேந்திரன், அபிமன்யு, நாகராஜ், வசீகரன் ஆகியோரை சிறைபிடித்தனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பயோ மெட்ரிக் முறை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!