சிங்கள வணிக நிறுவனங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முற்றுகை போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன் பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் மலைச்சாமி ராமச்சந்திர ஆகிய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து விசைப்படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் ஒருவர் இறந்த நிலையிலும் மற்றொருவர் மாயமான நிலையிலும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் நான்கு பேர்கள் சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் மீது தொடர் அட்டூலியம் செய்து வருவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகாந்தி தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் சனநாயக கட்சி தலைவர் கே.எம்.செரீப், தேவேந்திரகுல மக்கள் முன்னணி தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் ஆகியோர் இவ்விரு குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பின்பு, ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோரை நேரில் சந்தித்து மலைச்சாமி மரணம் குறித்து காவல்துறை உரிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் , கடந்த நான்கு நாட்களாக தேடியும் இதுவரை கிடைக்காத ராமச்சந்திரன் நிலை குறித்தும் , விரைவில் உரிய தகவல் அறிந்து அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அரசு உதவிட வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்

சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அட்டூழியம் செய்து வருவதை கண்டித்து தமிழ்நாட்டில் இயங்கிவரும் சிங்கள வணிக நிறுவனமான ‘தம்ரோ’ பர்னிச்சர்ஸ் கடையை ஆகஸ்ட் 10 ஆம் தேதி சனிக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மீனவ சங்க தலைவர் சகாயம், மீனவ தொழிலாளர்கள் சங்கம் ஹரி, பாரம்பரிய மீனவ கூட்டமைப்பு தலைவர் சே.சின்னத்தம்பி, எஸ்டிபிஐ ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரியாஸ் கான், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல், தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஜெ.ஜெரின் குமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நவ்ஷாத் அலிகான், துணை பொது செயலாளர் சண்முகராஜா, தமிழ்ப்புலிகள் கட்சி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மு.சங்கர், துணைச் செயலாளர் சோனை.முத்து, நகர செயலாளர் காளிதாஸ், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி ஊடகப்பிரிவு பொறுப்பாளர்கள் பிரட்ரிக் பிரபாகரன், ரியாஸ் மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தார்கள்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!