மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா .!

 

கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாரிமுத்து (மு.கூ.பொ.) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ. கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

தமது உரையில் அவர், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி, அறம் காப்பது மற்றும் உழைப்பின் மேன்மையை வலியுறுத்தி, “விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை” என்ற பழமொழியை மேற்கோளிட்டு மாணவர்களை ஊக்குவித்தார்.

பாரதியார் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற பொருளியல் மற்றும் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பொருளியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, வணிகவியல், வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளில் இளநிலைப் பட்டமும், வணிகவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றப்பட்டதுடன், மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்தனர். விழா இனிதே நிறைவுற்றது.

இவ்விழாவில் 650க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பட்டம் பெற்றனர். விழா சிறப்பாக நடைபெற கல்லூரி நிர்வாகம் சிறந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!