கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயம் முதல் பிரதிஷ்டை தின விழா
ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கடந்த 13.03.2005ம் தேதி அன்று சபரிமலை தலைமை குருக்கள் மகா ஸ்ரீ கண்டரு ராஜீவரரு அவர்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, அதே மார்ச் 13ல் பிரதிஷ்டை தின விழா நாளில் காலை கணபதி ஹோமம், அஷ்டபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புடன் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களின் பஜனை கோஷம் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது, சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர், கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது, ஏற்பாடுகள் அனைத்தையும் தலைமை குருக்கள் மோகன் சாமி தலைமையில் ஸ்ரீ வல்லபை ஐயப்பாசேவா நிலைய அறக்கட்டளையினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.