தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் சரவணபாபு உத்தரவுபடியும், தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா ஆலோசனைப் படியும் அனுசரிக்க பட்டது.

நிகழ்ச்சியில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றி மலரஞ்சலி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சுரண்டை ஸ்ரீ அன்னை இன்ஸ்டிட்யூட் மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சுரண்டை தீயணைப்பு நிலையம் மூலம் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி வரை சுரண்டை வட்டாரங்களில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி கல்லூரிகளில் தீயணைப்பு துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.