ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள படப்புவயல் கிராமத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை ஓரம் அமைந்துள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அபுல்ஹசம் என்பவரின் மகன் அக்பர்அலி (67) என்பவருக்குச் சொந்தமான இந்தத் தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், பத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் ஐந்துக்கும் மேற்பட்ட பனை மரங்களும் எரிந்து நாசமாகின.
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
You must be logged in to post a comment.