மதுரை அம்மன் சன்னதி அருகில் ஜவுளிகடை மீது இடிவிழுந்து பெரும் தீ விபத்து..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள அம்மன் சன்னதியில் எதிரே உள்ள மூன்று மாடி ஜவுளிக் கடையில் மழையின் காரணமாக இடி விழுந்ததில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  தகவலறிந்த மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் நிலைய அதிகாரி தலைமையிலான குழுவினர்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ அதிகமாக பரவிய காரணத்தால் தல்லாகுளம்,  அனுப்பானடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 3மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் இரவு சுமார் 8 மணி அளவில் ஏற்பட்டதால்  தீயணைப்பு பணியில் மதுரை மாவட்ட அலுவலர், மதுரை உதவி மாவட்ட அலுவலர், மதுரை மற்றும் துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை அலுவலக உதவி மாவட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர் மற்றும் அனைத்து பணியாளர்களும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

இன்று (28/05/2020) மாலை 4 மணியிலிருந்து மதுரை நகர் முழுவதும், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதே இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம், மேலும் இந்த விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமல அடைந்திருக்கலாம் என அறியப்படுகிறது.

செய்தியாளர்கள் வி காளமேகம்மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!