மதுரை அருகே தீபாவளி கொண்டாட்டத்தின் போது தீ விபத்து.. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக பழைய கார் உதிரி பாகம் வைக்கப்பட்ட குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அதை தொடர்ந்து விரைந்து வந்த மதுரை டவுன் தீயணைப்புத் துறையினர் தீ அணைக்க போராடி கொண்டு வந்தனர்.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சேக்அப்துல்லா என்பவரது இடத்தில் வாடகைக்கு ஜெயந்தி என்பவர் பாலா கேபிள் நெட்வொர்க் என்ற நிறுவனம் மற்றும் உதிரிபாகங்கள் வைக்கும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளார். இன்று (27/10/2019) தீபாவளி என்பதால் அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடித்த வண்ணமிருந்தன இதில் எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடிக்கும் பொழுது அதில் இருந்து ஏற்பட்ட தீயினால் கார் உதிரிபாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பழைய கார் உதிரி பாகம் என்பதால் தீ வேகமாக பரவியது அருகில் குடியிருப்பு பகுதிகள் இருந்ததால் அப்குதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்த தீ விபத்தை கட்டுப்படுத்த அனுப்பானடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வாகனத்தால் கட்டுக்குள் தீ வராததால் மேலும் 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதே போல் மதுரை QRV பைபாஸ் சாலையில் உள்ள ஒரு  வீட்டில் தென்னை மரம் தீ பிடித்து விபத்து ஏற்பட்டதால் மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!