உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து….

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை பகுதிக்குள் அமைந்துள்ளது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். இந்த அலுவலகம் அருகே நீண்ட நாட்களாக குப்பை அகற்றப்படாமல் இருப்பதால் குப்பை மேடாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் அந்த குப்பை மேட்டில் திடிரென்று தீப்பிடித்து மளமளவென எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே கிடந்த குப்பையை அதிகாரிகள் அகற்றாமல் இருப்பதானாலேயே இந்த தீ விபத்து பெரும் விபத்தாக மாறியிருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அருகிலேயே நூலகம், விவசாயத்துறை அலுவலகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!