இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார். அப்போது கோயில் நான்கு ரத வீதிகளில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக ஆட்சியர் ஆய்வில் தெரிந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றிக் கொள்ள அதன் உரிமையாளர்களுக்கு ஆட்சியர் கால அவகாசம் கொடுத்தார். ஆனால் கடைகளை அப்புறப்படுத்தாமல் அதன் உரிமையாளர்கள் போக்கு காட்டினர்.
அக்கடைகளை நகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுத்தார். உணவகங்கள், பிளாஸ்டிக் கடைகளில் உள்ள பொருட்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக 8 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஆக்கிரமிப்பு கடைகள் மேலும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.


You must be logged in to post a comment.